Saturday, June 6, 2009

பதிவுகளை ஏற்றுமதி/இறக்குமதி செய்வது எப்படி?

·

உங்களுடைய பிளாக்கின் பதிவுகளையும், மறுமொழிகளையும், இன்னபிற பிளாக்கின் மொத்தத்தையும் சேமித்து வைக்க விரும்பினால் உங்களால் Export blog மூலம் சேமிக்க முடியும். சேமித்து வைத்தலுடன் மற்றொரு பிளாக்கிற்கு உங்களது பதிவுகளை தரவிறக்கம் செய்ய விரும்பினால் Import blog மூலம் முடியும். அதற்கான வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


1. பிளாக்கருக்கான கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
2. Dashboard >> எந்த பிளாக்கை சேமிக்க வேண்டுமோ அவற்றில் Settings ஐ சொடுக்கிக் கொள்ளுங்கள்.
3. Settings-ல் Basic அமைப்பில் Import Blog, Export Blog, Delete blog என இருப்பதைக் காணலாம்.
4. முதலாவதாக பிளாக் பதிவுகளை தரவிறக்கம் அல்லது சேமிக்க Export Blog ஐ சொடுக்கவும்.



5. Download Blog ஐ சொடுக்கவும்.



6. சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்து Save ஐ சொடுக்கவும். இக்கோப்புகள் XML ல் இருப்பதைக் கவனிக்கவும்.



7. அடுத்ததாக வேறொரு பிளாக்கில் உள்ளீடு செய்ய Import Blog பயன்படுகிறது. Dashboard >> Settings >> Basic சென்று Import Blog தேர்வு செய்யவும்.




8. சேமிக்கப்பட்ட கோப்பை தேர்வு செய்து படத்தில் காட்டப்பட்டுள்ள எழுத்தை அடித்துவிட்டு Import Blog ஐ சொடுக்கவும். நீங்கள் உள்ளீடு செய்யும் பதிவுத்தொகுப்புகள் தானாக இணையத்தில் பதியாமல் செய்ய Automatically publish all imported posts ஐ தேர்வு செய்யாமல் இருக்கலாம்.





9. உங்களுடைய பிளாக்கை நீக்க Delete Blog ஐ சொடுக்கி அழிக்கலாம்.

0 comments: