Saturday, June 6, 2009

பிளாக்கரில் பயனரின் விபரங்களை மறைக்க !

·

நீங்கள் பிளாக்குகளில் உலவும் போதும், மறுமொழிகளை இடும் போதும் உங்களைப் பற்றிய விபரங்களையும், உங்களுடைய பிளாக்குகளையும் மற்றவர்களால் பார்க்க முடியும். உங்களைப் பற்றிய விபரங்களை மறைப்பதற்கும், அல்லது ஒரு சில குறிப்பிட்ட பிளாக்குகளை பட்டியலில் இருந்து அகற்றவும் உங்களால் மாற்றிக் கொள்ள முடியும். அது எவ்வாறு என்பதை இங்கே காண்போம்.


1. உங்களுடைய பிளாக்கருக்கான கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.

2. அவற்றில் Dashboard ஐ சொடுக்க கீழ்க்கண்டவாறு தெரியும்.



3. Edit Profile ஐ சொடுக்கவும். கீழ்க்கண்டவற்றை காணலாம்.
4. உங்களைப் பற்றிய முழு விபரங்களை மற்றவர்கள் பார்க்க விரும்பினால் Show My Profile என்ற வார்த்தைக்கு அருகிலுள்ள பட்டனை தேர்வு செய்ய வேண்டும். மறைக்க வேண்டுமெனில் தேர்வு செய்வதை நீக்கி விடலாம்.



5. மேலும் மற்றவர்கள் உங்களுடைய Profile ஐ பார்க்கும் பொழுது குறிப்பிட்ட பிளாக்குகளை மறைக்க விரும்பினால், உதாரணமாக தனிப்பட்ட முறையில் உங்களுக்கென நீங்கள் வடிவமைத்த தனிப்பட்ட பிளாக்கை மற்றவர்களின் கண்களில் இருந்து மறைக்க Select blog to display ஐ சொடுக்கவும்.
6. எந்த பிளாக்கை மறைக்க விருப்பமோ அவற்றை நீக்கி விட்டு Save Settings ஐ சொடுக்கவும்.





அவ்வளவு தான்.. உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றாற் போல் தற்சமயம் பண்ணியாகி விட்டது. வேறு சந்தேகம் ஏதும் இருந்தால் மறுமொழியிடுங்கள்.

0 comments: