Sunday, June 14, 2009

முதன்மையான பிளாக்கர் அடைப்பலகைகள் கிடைக்கும் தளங்கள்.

· 0 comments

பிளாக்கருக்கான அடைப்பலகைகள் நூற்றுக்கணக்கான இணைய தளங்களால் உருவாக்கப்பட்டு உலகிலுள்ள பயனர்களுக்காக இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. இதில் வேர்ட்பிரஸ் அடைப்பலகைகள் வெகுவாக பிளாக்கருக்கு மாற்றம் செய்யப்பட்டு அளிக்கப்படுவது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இவற்றில் முதன்மையான 10 தளங்களைப் பட்டியலிட முனைகிறேன்.

இத்தளங்களினால் உங்களுக்குத் தேவையான அடைப்பலகைகளை எளிதாக பெறுவீர்கள் என எண்ணுகிறேன். இதில் உங்களுக்கு மாற்றுக்கருத்தாகவோ, அல்லது வேறுவகையினாலோ ஏதேனும் தளம் இருந்தால் இங்கே அறிமுகப்படுத்துங்கள்.

Read in english : Ultimate Blogger Templates

மேலும் வாசிக்க...

அச்சுப்பிரதி வேர்ட்பிரஸ் அடைப்பலகை

· 0 comments

டிங்கர்பிரைஸ்ட் மீடியா என்னும் இணையதளம் அச்சுபிரதி வடிவமைப்பிலான அடைப்பலகைகளை தனது தளத்தில் அமைத்துள்ளது. மூன்று பத்திகளையும், பிரதி வடிவலினான இந்த அடைப்பலகைகள் மிக அற்புதமாகவும், அழகாகவும் காட்சியளிக்கிறது.

இந்த அடைப்பலகைகளை தாங்களின் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் என்னைத் தொடர்புகொள்ளலாம்.

மாதிரி | தரவிறக்கு

மாதிரி | தரவிறக்கு

மாதிரி | தரவிறக்கு

Read in english : NewsPrint Style Wordpress Themes

மேலும் வாசிக்க...

Saturday, June 6, 2009

பதிவுகளை ஏற்றுமதி/இறக்குமதி செய்வது எப்படி?

· 0 comments

உங்களுடைய பிளாக்கின் பதிவுகளையும், மறுமொழிகளையும், இன்னபிற பிளாக்கின் மொத்தத்தையும் சேமித்து வைக்க விரும்பினால் உங்களால் Export blog மூலம் சேமிக்க முடியும். சேமித்து வைத்தலுடன் மற்றொரு பிளாக்கிற்கு உங்களது பதிவுகளை தரவிறக்கம் செய்ய விரும்பினால் Import blog மூலம் முடியும். அதற்கான வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. பிளாக்கருக்கான கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
2. Dashboard >> எந்த பிளாக்கை சேமிக்க வேண்டுமோ அவற்றில் Settings ஐ சொடுக்கிக் கொள்ளுங்கள்.
3. Settings-ல் Basic அமைப்பில் Import Blog, Export Blog, Delete blog என இருப்பதைக் காணலாம்.
4. முதலாவதாக பிளாக் பதிவுகளை தரவிறக்கம் அல்லது சேமிக்க Export Blog ஐ சொடுக்கவும்.

5. Download Blog ஐ சொடுக்கவும்.

6. சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்து Save ஐ சொடுக்கவும். இக்கோப்புகள் XML ல் இருப்பதைக் கவனிக்கவும்.

7. அடுத்ததாக வேறொரு பிளாக்கில் உள்ளீடு செய்ய Import Blog பயன்படுகிறது. Dashboard >> Settings >> Basic சென்று Import Blog தேர்வு செய்யவும்.

8. சேமிக்கப்பட்ட கோப்பை தேர்வு செய்து படத்தில் காட்டப்பட்டுள்ள எழுத்தை அடித்துவிட்டு Import Blog ஐ சொடுக்கவும். நீங்கள் உள்ளீடு செய்யும் பதிவுத்தொகுப்புகள் தானாக இணையத்தில் பதியாமல் செய்ய Automatically publish all imported posts ஐ தேர்வு செய்யாமல் இருக்கலாம்.

9. உங்களுடைய பிளாக்கை நீக்க Delete Blog ஐ சொடுக்கி அழிக்கலாம்.

மேலும் வாசிக்க...

பிளாக்கரில் பயனரின் விபரங்களை மறைக்க !

· 0 comments

நீங்கள் பிளாக்குகளில் உலவும் போதும், மறுமொழிகளை இடும் போதும் உங்களைப் பற்றிய விபரங்களையும், உங்களுடைய பிளாக்குகளையும் மற்றவர்களால் பார்க்க முடியும். உங்களைப் பற்றிய விபரங்களை மறைப்பதற்கும், அல்லது ஒரு சில குறிப்பிட்ட பிளாக்குகளை பட்டியலில் இருந்து அகற்றவும் உங்களால் மாற்றிக் கொள்ள முடியும். அது எவ்வாறு என்பதை இங்கே காண்போம்.

1. உங்களுடைய பிளாக்கருக்கான கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.

2. அவற்றில் Dashboard ஐ சொடுக்க கீழ்க்கண்டவாறு தெரியும்.

3. Edit Profile ஐ சொடுக்கவும். கீழ்க்கண்டவற்றை காணலாம்.
4. உங்களைப் பற்றிய முழு விபரங்களை மற்றவர்கள் பார்க்க விரும்பினால் Show My Profile என்ற வார்த்தைக்கு அருகிலுள்ள பட்டனை தேர்வு செய்ய வேண்டும். மறைக்க வேண்டுமெனில் தேர்வு செய்வதை நீக்கி விடலாம்.

5. மேலும் மற்றவர்கள் உங்களுடைய Profile ஐ பார்க்கும் பொழுது குறிப்பிட்ட பிளாக்குகளை மறைக்க விரும்பினால், உதாரணமாக தனிப்பட்ட முறையில் உங்களுக்கென நீங்கள் வடிவமைத்த தனிப்பட்ட பிளாக்கை மற்றவர்களின் கண்களில் இருந்து மறைக்க Select blog to display ஐ சொடுக்கவும்.
6. எந்த பிளாக்கை மறைக்க விருப்பமோ அவற்றை நீக்கி விட்டு Save Settings ஐ சொடுக்கவும்.

அவ்வளவு தான்.. உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றாற் போல் தற்சமயம் பண்ணியாகி விட்டது. வேறு சந்தேகம் ஏதும் இருந்தால் மறுமொழியிடுங்கள்.

மேலும் வாசிக்க...

Thursday, June 4, 2009

பதிவுகளில் “மேலும் படிக்க..” இணைப்பது எப்படி?

· 0 comments

பதிவுகள் பொதுவாக ஒன்றன் கீழ் ஒன்றாக தொடர்ச்சியாய் அமைந்திருக்கும். இப்பதிவுகளின் அளவு சிறியதாகவும், பெரியதாகவும் அமைந்திருக்கும். பெரிதாய் அமைந்திருக்கும் பதிவுகளினால் ஒன்றன் கீழ் ஒன்றாக அமைந்திருக்கும் பதிவுகளைப் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் சிரமமாய் இருக்கும். ஆகையினால் பெரிதாக அமைந்துள்ள பதிவை “மேலும் படிக்க” என்பது போல் அமைத்து விரிவாக்கம் செய்து கொள்ள ஒரு இணைப்பை கொடுக்கலாம்.

இவ்வாறு செய்வதனால் நாம் இடும் பதிவின் அளவை ஒரே சீராக வைக்க உதவுகிறது.

அதற்கான செயல்முறைகளை தற்போது பார்ப்போம்.

1. பிளாக்கர் கணக்கினுள் நுழைந்து கொள்ளுங்கள்.

2. Dashboard >> Layout >> Edit HTML சொடுக்குங்கள்.

3. Edit Template என்பனவற்றில் Expand Widget Templates ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள். இது கொடுக்கப்பட்டுள்ள நிரலினுள் விரிவாக்கம் செய்யப்பட்ட நிரலை இது இணைக்கும்.

4. பெட்டியிலுள்ள நிரல்களில்
<data:post.body/>
என்ற நிரல் இருக்கும் இடத்தை தேடி கீழே கொடுக்கப்பட்டுள்ள நிரலை
<data:post.body/>
க்கு மேலே இருக்குமாறு Paste செய்யவும்.

<b:if cond='data:blog.pageType == "item"'>

<data:post.body/>

<b:else/>

5. அடுத்ததாக கீழே கொடுக்கப்பட்ட நிரலை
<data:post.body/>
க்கு கீழே இருக்குமாறு Paste செய்யவும்.

<b:if cond='data:blog.pageType != "item"'>

மேலும் படிக்க..…
</b:if>
</b:if>

6. அதாவது மேல்கண்ட்ட 4, 5 வது செயல்முறைகள் கீழ்க்கண்டவாறு உள்ளதா என சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

<b:if cond='data:blog.pageType == "item"'>

<data:post.body/>

<b:else/>

<data:post.body/>

<b:if cond='data:blog.pageType != "item"'>

மேலும் படிக்க..…
</b:if>
</b:if>

7. Save Template பொத்தானை சொடுக்கி வடிவமைப்பில் இணைத்தவற்றை சேமிக்கவும். தற்போது வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக நாம் இடும் பதிவுகளில் எந்த அளவு வார்த்தைகளை சுருக்க வேண்டும் என்பதையும் முறைப்படுத்த வேண்டும்.

8. பதிவிடுவதற்கு Posting>> New Post தேர்வு செய்து உங்களது தலைப்பையும், கட்டுரையையும் பதிவிடுங்கள். பின் எதுவரை உங்களது பதிவு இணையத்தில் தெரிய வேண்டும் எனபதை தேர்வு செய்து கீழ்வருவனவாறு செயல்முறைப்படுத்துங்கள்.

கீழே கொடுக்கப்பட்டவற்றில் உங்களுக்கு முதல் பாராவை மட்டும் தான் வலைப்பூவில் தெரியவேண்டும் என வைத்துக் கொள்வோம். ‘இன்று எனத் தொடங்கும் வார்த்தைக்கு முன்
என இடவும், பின் அந்த பாராவின் முடிவில் என சேர்த்துக் கொள்ளவும்.

உதாரணமாக..

9. நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் இவ்வாறு இணைக்க உங்களின் பதிவுகள் வலைப்பூவில் கீழ்க்கண்டவாறு சீராக தோற்றமளிக்கும்.

மேலும் வாசிக்க...

நேவிகேஷன் பார் -ஐ நீக்குவது எப்படி ?

· 0 comments

நமது வலைப்பூவின் மேல்தளத்தினுள் நேவிகேஷன் பார் என அழைக்கப்படும் இந்த தட்டையானது ஏனைய பதிவர்களுக்கு ஒரு அசௌகரியானவற்றை கொடுக்கக் கூடியது. இந்த தட்டையானது நமது வலைப்பூவை சாதரண இணையப்பக்கத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டக் கூடியதால் இந்த அசௌகரியம் தோன்றுவதில் ஆச்சரியமில்லை தான்.

ஆயினும் உங்களால் இந்த தட்டையை உங்களின் வலைப்பூவிலிருந்து நீக்க முடியும்.

1. பிளாக்கருக்கான கணக்கில் நுழைந்து Dashboard >> Layout >> Edit HTML ல் செல்லுங்கள்.
2. இடப்பட்டுள்ள HTML நிரல்களுக்குள் கீழ்க்கண்ட நிரலைத் தேடுங்கள்.

Name: LIMATION BLOGS TEMPLATE
Designer: NILA
URL: www.limation.com
Type: Free Blogger Beta XML Skin

body {

3. கீழ்க்கண்ட நிரலை Copy செய்து body { நிரலுக்கு மேலே இருக்குமாறு Paste செய்யவும்.

#navbar-iframe {
height: 0px;
visibility: hidden;
display: none;

4. அதாவது, இவ்வாறு இருக்க வேண்டும்.

#navbar-iframe {
height: 0px;
visibility: hidden;
display: none;

body {

5. சேர்க்கப்பட்ட நிரலை Save செய்து View Blog சொடுக்கி உங்களின் வலைப்பூவை நேவிகேஷன் பார் இல்லாமல் அழகாக காணுங்கள்.

மேலும் வாசிக்க...

பிளாக் உருவாக்குவது எப்படி ?

· 0 comments

பிளாக் என்பது ஒரு வகையான வலைத்தளம் ஆகும். இது தனிப்பட்ட நபர் ஒருவரின் தினக்குறிப்புகள், பொருள் ஒன்றின் செய்திக் குறிப்புகள், நிறுவனம் ஒன்றின் தினச் செய்திகள், நிறுவனத்தின் செயல்பாடுகள், கணிப்பொறி தகவல்கள், நகர தகவல்கள் என ஏதாவது ஒன்றைப் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய தளங்களை பிளாக் அல்லது வலைப்பூக்கள் என்கிறோம்.

இன்று அனைத்து நாடுகளிலும் பிளாக் என்பது பிரபலமான ஒன்று. நிறுவனங்களின் முதன்மை அலுவலர்கள் முதல் கடைநிலை ஊழியர் வரை பிளாக் வைத்திருப்பது என்பது ஒரு பெரும் திறமையாகவே காணப்படுகிறது. தனிநபர் பிளாக்குகள் தாங்களின் கருத்துக்கள், படங்கள், காணொளிகள் என எண்ணற்றவற்றை செயல்படுத்தும் தளமாக இது விளங்குகிறது.

இவற்றை வலைத்தளங்களில் உருவாக்குதற்கு டொமைன் பெயர்கள் தேவைப்படும், அத்துடன் தகவல்களை சேமிப்பதற்கான இடங்களும் தேவைப்படும். இவற்றை நீங்கள் விரும்பும் பெயர்கள் மற்றும் இடங்களின் அளவைப் பொறுத்து மாறுபடும். உதாரணமாக உங்களுக்கான டொமைன் பெயர் www.robertblog.com எனில் டொமைனை பதிவு செய்வதற்கான செலவு மட்டும் $10 ஆகும். இது தவிர எவ்வளவு தகவல்களை சேமிக்கப் போகிறீர்கள் என்பதற்கு அதன் அளவைப் பொறுத்து மாறுபடும். உதாரணமாய் உங்களுக்கு 1 GB தேவை எனில் அதற்கு 20$ செல்வழிக்க நேரிடும்.

இவ்வகையிலான செலவு எதையும் செய்யாமலேயே உங்களால் வலைப்பூக்களை உருவாக்க முடியும். அது பிளாக் உருவாக்குவதற்கான சேவையை சில தளங்கள் இலவசமாய் செய்து வருகின்றன. கீழ்க்கண்ட தளங்கள் இலவச வலைப்பூக்களை உருவாக்க உதவுகின்றன.

1. Wordpress
2. Blogger
3. Live Journal

இவற்றில் தற்போது பிளாக்கரின் மூலம் வலைப்பூவை எவ்வாறு உருவாக்கலாம் எனக் காணலாம்.

1. பிளாக்கரின் தளத்திற்குச் செல்லுங்கள் www.blogger.com

2. பிளாக்கருக்கான பயனர் கணக்கை துவங்க உங்களுக்கு ஜீமெயில் கணக்கு வைத்திருக்க வேண்டும். (பிளாக்கர் என்பது கூகிள் நிறுவனத்தின் படைப்பாகும்)
தற்போது பிளாக்கை உருவாக்க Create Blog என்னும் பொத்தானை சொடுக்கவும்.

3. மேலே கூறியது போல் உங்களிடம் ஏற்கனவே பிளாக்கர் கணக்கு இருப்பின் sign in first ஐ சொடுக்கவும். இல்லையெனில் பிளாக்கர் கணக்கை துவக்க கேட்கப்பட்ட கூகிள் கணக்கின் விபரங்களை கொடுத்து Continue ஐ சொடுக்கவும்.

4. பிளக்கர் கணக்கு உருவாக்கப்பட்டு விட்டது. தற்போது நீங்கள் பிளாக்குக்கான பெயரிட வேண்டும். பிளாக்கிற்கான தலைப்பையும், பிளாக் முகவரியையும் இட்டு முகவரி உள்ளதா என சோதித்துக் கொள்ளல்லாம். பின் Continue ஐ சொடுக்கவும்.

5. தற்போது பிளாக்குக்கான வடிவமைப்பை தேர்வு செய்ய வேண்டும். வடிவமைப்பு எனபது பிளக்குக்கான அடிப்படை கட்டமைப்பைப் பற்றியது. இதில் தலைப்பு, இடதுபக்கம், வலதுபக்கம், கீழ்த்தளம், மற்றும் தகவல்களை பொருத்த என வெவ்வேறான பகுதிகளைக் கொண்டிருக்கும். பிளாக்கர் வெவ்வேறு வடிவமைப்புகளைக் கொண்டவற்றைக் கொண்டிருக்கும். இவ்வடிவமைப்புக்களின் வண்ணங்களையும், அளவுகளையும் உங்களால் கூட்டவோ, குறைக்கவோ முடியும். அல்லது இணையத்தில் பரவிக் கிடக்கும் மற்ற வடிவமைப்புக்களையும் சேர்க்கலாம். தற்சம்யம் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து Continue ஐ சொடுக்கவும்.

6. அடுத்ததில் Start Blogging ஐ சொடுக்க உங்களுடைய பிளாக் உருவாக்கப்பட்டது.

7. உங்களது பிளாக் உருவாக்கப்பட்டதைக் காண மேல்வலது மூலையில் உள்ள Dashboard ஐ சொடுக்கவும்.

8. இவற்றில் உங்களது பிளாக்கிற்கான அனைத்துக் கருவிகளையும் காணலாம். அதாவது Posting, Settings, Layout, View Blog ஆகியன முக்கியான கருவிகளாகும்.

Edit Post >> புதிகாக தகவல்களை இடுவதற்குப் பயன்படுகிறது.
Settings >> அமைப்புகளை உங்களின் விருப்பத்த்ற்கு ஏற்ப மாற்றுவதற்கு பயன்படுகிறது.
Layout >> பிளாக்கிற்கான வடிவமைப்பில் மாற்றம் செய்ய இது உதவுகிறது.
View Blog >> பிளாக்கின் இணைய தளத்தைக் காணுவதற்கு பயன்படுகிறது.

9. தற்போது Edit Post ஐ சொடுக்குங்கள்.

10. பின் New Post ஐ சொடுக்குங்கள்.

11. தற்போது இடப்போகும் பதிவின் தலைப்பு, தகவல்கள், லேபிள்கள் என அனைத்தையும் கொடுத்து Publish Post ஐ சொடுக்குங்கள்.

12. உங்களின் பதிவு இணையத்தில் ஏற்றப்படும். தாங்கள் கொடுத்த முகவரியுடன் .blogspot.com சேர்த்து இணையத்தில் காண அல்லது View Blog ஐ சொடுக்க உங்களின் பதிவு கிடைக்கும். கீழ்க்கண்ட படத்தைக் காண்க.

மேலும் வாசிக்க...